முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அதிமுக நகர கழக சார்பில் எம்ஜிஆரின் திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக அதிமுக நகர கழக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் அருகே உள்ள எம்ஜிஆரின் திருவுருச்சிலைக்கு நகரச் செயலாளர் விஜயபாண்டியன், தலைமையில் எம்ஜிஆரின் திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட குழு தலைவி ஊராட்சி சத்யா, ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,
ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன்,நகரத் துணைச் செயலாளர் மாதவராஜ், நகரப் பொருளாளர் ஆரோக்கியராஜ்,அம்மா பேரவை மாவட்ட பொருளாளர் வேலுமணி,வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள்,

வழக்கறிஞர் சங்கர் கணேஷ்,அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,வார்டு செயலாளர்கள் ரவிச்சந்திரன்,செந்தில்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, முன்னாள் பொருளாளர் வேல்முருகன்,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,
அதிமுக நிர்வாகிகள் ஜெயந்தி, பத்மாவதி, மனோகரன், அழகர்சாமி, பழனிகுமார், பழனி முருகன், பாலாஜி,ஜெய்சிங், குழந்தை ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
