உடுமலைப்பேட்டை ஓபிஸ் அணி சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு ஓபிஸ் அணி சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு நகரச் செயலாளர் யூ.ஜி.கே சற்குணசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் புற நகர் மாவட்ட செயலாளர் காமராஜ் அவர்கள் கலந்து கொண்டு 300க்கு மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதில் மாவட்ட அவைத் தலைவர். மாவட்ட இணைச்செயலாளர்.
திருப்பூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் குடிமங்கலம் மேற்கு ஓன்றிய செயலாளர் பொதுக்குழு உறுப்பினர் நகர நிர்வாகிகள். குமரலிங்கம் பேரூர் கழக செயலாளர் மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் உட்பட 300க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அதிமுகஅரசியல்உடுமலைப்பேட்டைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர்திருப்பூர் மாவட்டம்முக்கிய செய்திகள்
