தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு மக்கள் நலப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்தில் உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்வதில் பல்வேறு தரப்பினரும் தயக்கம் காட்டிய நிலையில் இவர்களின் பங்கு அளப்பரியது என்பது அனைத்து மதத் தரப்பினரும் அறிந்ததே.
மேலும் அக்காலத்தில் சாலையோர மக்களுக்கும் உணவு வழங்குவதிலும் இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உணவளித்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் ரத்த கொடையாளர்களுக்கான சிறப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஒலி முகமது பேட்டையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அன்சாரி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் அல் அமீன் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் கிளியின் சார்பாக 33 வது ரத்ததான முகாம் துவக்கி வைத்த மேயர், 70க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு குருதி நன்கொடை வழங்கினர்.