BREAKING NEWS

தேனி மாவட்ட விளையாட்டு திடலில், “74 வது குடியரசு தின” விழாவில் தேனி ஆட்சியர் முரளிதரன் சிறப்பாக பணியாற்றிய 280 நபர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தேனி மாவட்ட விளையாட்டு திடலில், “74 வது குடியரசு தின” விழாவில் தேனி ஆட்சியர் முரளிதரன் சிறப்பாக பணியாற்றிய 280 நபர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

 

இந்திய தாய் திருநாட்டின் 74 வது குடியரசு தின விழா ஒட்டி, இன்று நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக தேனி மாவட்ட விளையாட்டு திடலில் இன்று காலை தேனி மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் முன்னிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையேற்று மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

 

அதனைத் தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக முதலமைச்சரின் பதக்கம் பெற்ற 66 காவலர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

 

 

அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திய மருத்துவமனைகள் 3 க்கும்,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 8 பேர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 9 பேர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 15 பேர் ,

 

தேனி திட்ட இயக்குனர் ( தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார) இயக்கத்தில் 2 பேர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை யில் 6 பேர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்,..

 

 

பழங்குடியினர் நலத்துறையில் 9 பேர், பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையில் 18 பேர், மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறையில் 18 பேர், மருத்துவக் கல்வித்துறையில் 5 பேர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் 3 பேர், மருத்துவப் பணிகளில் காசநோய் பிரிவில் 2 பேர், மாவட்ட குடும்ப நல செயலகத்தில் 14 பேர்,

 

 

கால்நடை பராமரிப்புத் துறையில் 4 பேர், உதவி இயக்குனர் பேரூராட்சி களில் 7 பேர், வேளாண்மை இணை இயக்குனர் பிரிவில் 3 பேர், தோட்டக்கலைத் துறையில் 4 பேர், பொதுப்பணித்துறையில் 3 பேர், முதன்மை கல்வி அலுவலகம் பிரிவில் 17 பேர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 4 பேர், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 3 பேர், போக்குவரத்து துறையில் 2 பேர்,

 

நெடுஞ்சாலைத்துறையில் 3 பேர், கூட்டுறவு சங்கங்களில் இணை பதிவாளர் பிரிவில் 6 பேர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பிரிவில் 4 பேர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பிரிவில் 9 பேர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிரிவில் 4 பேர்,

 

 

தொழிலாளர் உதவி ஆணையம் அமலாக்கம் பிரிவில் 1 பேர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் 3 பேர், மாவட்ட மேலாளர் தாட்கோ பிரிவில் 2 பேர், அவசரகால ஊர்தி 108 ஆம்புலன்ஸ் பிரிவில் 8 பேர், மாவட்ட திட்ட அலுவலகம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் பிரிவில் 8 பேர்,

 

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பிரிவில் 5 பேர், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பிரிவில் 2 பேர் என 280 நபர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

 

CATEGORIES
TAGS