BREAKING NEWS

தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையம்.

தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையம்.

தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் எட்டாவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் இன்று துவங்கப்பட்டது. 

 

இப்பயிற்சியினை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட சேர்மன் வரதராஜன் மற்றும் தஞ்சாவூர் பேரிடர் வட்டாட்சியர் திருமதி. ராஜேஸ்வரி முன்னிலையில் அரிமா சங்க முன்னாள் ஆளுநர் முகமது ரபி அவர்கள் துவக்கி வைத்தார்.

 

இப்பயிற்சியில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த 9 தாலுக்காவிலிருந்து 40 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர். இப்பயிற்சி 28.01.23 முதல் 08.02.23 வரை 12 நாட்கள் நடைபெறும். 

 

 

இப்பயிற்சியில் தினசரி மாநில அளவில் சிறந்த பயிற்சியாளர்கள் கொண்டு பேரிடர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி வழங்கப்படுகிறது.

 

இந்நிகழ்வில் ரெட்கிராஸ் மாவட்ட துணைச் சேர்மன் பொறியாளர். முத்துக்குமார், பொருளாளர் ஷேக் நாசர், யூத் ரெட்கிராஸ் ஆலோசகர்  ஜெயக்குமார், ஆம்புலன்ஸ் ஆலோசகர்  சுப்பிரமணியம், நிதிக்குழு உறுப்பினர்கள் ராமதாஸ்,  குருநாதன், இரத்த வங்கி உறுப்பினர்  ஸ்டாலின் பீட்டர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS