BREAKING NEWS

கோவில் நிலத்தில் உள்ள ரூ.3 கோடி ரூபாய் நிலுவை உள்ள வாடகைதாரர்களை வாடகை வசூலிக்க நூதன முறையில் கோயில் நிர்வாகம் முயற்சி.

கோவில் நிலத்தில் உள்ள ரூ.3 கோடி ரூபாய் நிலுவை உள்ள வாடகைதாரர்களை வாடகை வசூலிக்க நூதன முறையில் கோயில் நிர்வாகம் முயற்சி.

வாடகை செலுத்தியவர்களை மேளம் தளங்களுடன் வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து கோவில் பிரசாதம் வழங்கி மரியாதை

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான ஸ்ரீகச்சபேஸ்வரர் நகர் பகுதியில் சுமார் 286 வாடகைதாரர்கள் குடியிருந்து வருகின்றனர்.

 

இதில் 286 வடைகைதார்கள் கடந்த 30 ஆண்டுகளாக ரூ.3 கோடிக்கு மேல் வாடகை செலுத்தாமல் இருக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களிடம் இரண்டு தவணையாக வாடகை செலுத்தும் படி…

 

கோவில் நிர்வாகம் சார்பில் பல முறை முறையிட்டும் வாடகைதாரர்கள் வாடகை செலுத்தாததால் வாடகை வசூல் செய்ய பல்வேறு முயற்சிகளை கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் வாடகை செலுத்தாத நபர்களை பெயர் மற்றும் வாடகை செலுத்த வாடகை பாக்கியை வாடகைத்தாரர்கள் பெயருடன் நகர் மத்தியில் உள்ள கோவிலில் அருகே பேனர் வைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் 286 நபர்களில் 97 நபர்கள் மட்டுமே வாடகை செலுத்தியுள்ளனர். மீதமுள்ள 189 பேர் வாடகைதார்களிடம் வாடகை பெற வாடகை செலுத்திய 97 நபர்களை வீடு தேடி மேளதாளங்களுடன் சால்வை அணிவித்து கோவில் பிரசாதம் வழங்கி மரியாதை செலுத்திய கோவில் செயல் அலுவலர் நடராஜன் மற்றும் பூங்குழலி மற்றும் கோவில் ஊழியர்கள் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

CATEGORIES
TAGS