நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி நடைபெற்றது.
மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30 தேசிய தொழுநோய் ஒழிப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இன்று நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் வைத்து தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் பேரணி துவக்கிவைத்தல் நிகழ்வு நடைபெற்றது.
30.01.2023 முதல் 14.22023 வரை நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள், ஊனத்தடுப்பு முகாம், தோல்நோய் முகாம், விளம்பர நிகழ்ச்சி, பயிற்சிகள்,தொழிற்சாலைகளில் பரிசோதனை, களப்பணி நோய் கண்டுபிடிப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
உலக அளவில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60% பேர் இதியாவில் உள்ளனர். தமிழ்நாட்டில் சராசரியாக 5000 நோயாளிகள் வருடம் தோறும் கண்டு பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் அலர் சாந்தி துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் தொழுநோய், பாலசுப்பிரமணியன் துணை இயக்குநர் மருத்துவப்பணிகள், ராமநாதன் இணை இயக்குநர், ராஜேந்திரன், வெள்ளைசாமி, ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.