BREAKING NEWS

தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கும்பாபிஷேக பணி அமைச்சர் சேகர்பாபு வருகை தந்து கும்பாபிஷேக பணியினை ஆய்வு.

தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கும்பாபிஷேக பணி அமைச்சர் சேகர்பாபு வருகை தந்து கும்பாபிஷேக பணியினை ஆய்வு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சாமி திருக்கோவிலுக்கு இன்று காலை தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்து கும்பாபிஷேக பணியினை ஆய்வு மேற்கொண்டார்.

 

பின்னர் கலிங்கப்பட்டி அருகே உள்ள மேல மரத்தோணி சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார் அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது..

 

திமுக ஆட்சி ஏற்பட்டதும் 460 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றிருக்கிறது அதில் 100 ஆண்டுகள் மேலான திருக்கோவில்கள் இந்த ஆட்சியில் தான் குடமுழுக்கு நடத்தப்பட்டு இருக்கிறது அதற்கு சுந்தர்ராஜப் பெருமாள் கோவில் சான்றாகும் திருப்பணியினை வைகோ ஏற்பாட்டில் நடைபெற்று இருக்கிறது.

 

 

இத்திருக்கோவில் விக்கிரகத்தை பார்க்கின்ற பொழுது நேற்று வடிவமைத்தார் போல் உள்ளது எந்த இடத்திலும் ஒரு சின்ன இழப்பு கூட காண முடியவில்லை அப்படி காட்சி அளிப்பது இப்பகுதி மக்களின் சுபிட்சமான வாழ்க்கை நிலைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

 

அந்த வகையில் இந்த திருப்பணி செய்த வைகோவிற்கும் அவர்களது குடும்பத்திற்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையிலே தமிழக முதல்வர் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

இன்று காலை சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சங்கரலிங்கம் சங்கரநாராயணர் கோமதி அம்மனை தரிசனம் செய்து பின்னர் திருக்கோவில் கோமதி கஜமுகனை தரிசனம் செய்து அங்குள்ள தங்கத்தேர் மற்றும் மரத்தேர்களை ஆய்வு செய்து தெப்பக்குளம் திருக்கோவில் குளம் போன்றவற்றையும் ஆய்வு செய்துள்ளோம்.

 

 

தெப்பக்குளம் சங்கரன்கோவில் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது அதை உடனடியாக இந்து சமய அறநிலைத்துறையிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் சட்டமன்ற உறுப்பினர் ஏற்கனவே மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியரும் இரண்டு மூன்று தினங்களில் ஒப்படைக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

 

சுமார் 90 லட்சம் செலவில் அந்த தெப்பத்தினை சீர்படுத்த இருக்கின்றோம் அதேபோல் திருக்கோவிலில் உள்ள திருக்குளத்தை 10 லட்சம் செலவில் மேம்படுத்த இருக்கின்றோம் திருக்கோவில் முழுவதுமாக சுமார் 5.50 கோடி செலவில் திருப்பணிகள் செய்ய இருக்கின்றோம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார் ஆகியோரின் கோரிக்கைகளை ஏற்று சுமார் 5.50 கோடி அளவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

 

இதில் மூன்று கோடி ரூபாய் உபயதாரர் நிதியும் ஒரு கோடியே 70 லட்சம் செலவில் திருக்கோவில் திருப்பணி நீதியிலிருந்தும் செய்திட இருக்கின்றோம் அதேபோல் சங்கரநாராயணர் சந்ததியில் உள்ள மூலிகை ஓவியங்களை பாதுகாத்திட குருவாயூரிலிருந்து சிறப்பு தகுதி பெற்ற ஓவியர்களை அழைத்து வந்து,..

 

 

அவர்களின் ஆய்வுக்குப் பின் சுமார் 2 கோடி செலவில் அந்த மூலிகை ஓவியங்கள் பழைய பொலிவுடன் எப்படி இருந்ததோ அதேபோல் செய்து தர இருக்கின்றோம் ஆக ஒட்டுமொத்தமாக சுமார் 7.50 கோடி ரூபாய் செலவில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு பணியினை செய்திட திட்டமிட்டு இருக்கின்றோம்.

 

தொடர்ந்து இன்று மாலை நெல்லையப்பர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி அன்று நடைபெறுகின்ற விழாவினை ஆய்வு செய்ய இருக்கின்றோம் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு விழா திருப்பணிகள் செய்திட திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன கடந்த 1996 வது வருடம் நடைபெற்ற குடமுழுக்கு பின்பு தற்போதுதான் குடமுழுக்கு செய்யப்பட இருக்கிறது.

 

26 ஆண்டுகள் நடைபெறவில்லை ( இதில் 2008 ஆம் வருடம் திமுக ஆட்சியில் இருந்தபோது சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற்றது அப்போது பெரிய கருப்பன் அறநிலை துறை அமைச்சராக பதவி வகித்தார் அத்தகவல் தெரியாமல் 1996 ஆம் வருடத்திற்கு பின்பு நடைபெறவில்லை என தவறான தகவலை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்).

 

அதிலும் கடந்த ஆட்சியில்10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பணிகளை நாங்கள் எடுத்து செயல்படுத்திக் கொண்டு வருகிறோம் அடிப்படை வசதிகளான கழிப்பிடம் குடிநீர் வசதி பக்தர்கள் தங்குவதற்கான வசதி முடி காணிக்கை திருத்தும் மண்டபம் போன்ற அனைத்தும் இத்திருப்பணியில் நடைபெறுகின்றன கிட்டத்தட்ட 27 பணிகள் மேற்கொள்ள இருக்கின்றன.

 

 

அனைத்தும் முழுமை பெறும் பொழுது அந்த திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவு செய்திட செய்திட்ட ஒரு திருப்தியாக அமையும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் அதேபோல் பரிஜாதகர்களின் நியமனம் குறித்து நேர்முகத் தேர்வு நடத்திட அடிப்படை வேலைகளை உடனடியாக துவக்கி இருக்கின்றோம்.

 

ஆயிரம் ஆண்டுகள் கடந்த திருக்கோவில்கள் புனரமைக்கப்பட்டு அந்த திருக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்திட இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில் இல்லாத அளவு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்தமாக 509 திருக்கோவில்கள் அதில் 112 கோவில்களை புரணமைக்க வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

 

வருகின்ற ஆண்டும் முதல்வரிடம் கூடுதலாக நிதி ஒதுக்கிட கேட்டுள்ளோம் அள்ளித் தருகின்ற முதல்வர் இந்த ஆண்டும் கடந்த ஆண்டு போல ஆயிரம் ஆண்டுகள் கடந்த கோவில்களுக்கு திருப்பணிகள் செய்திட நிதி உதவி அரசின் சார்பில் தருவார் என நம்புகிறோம் வருகின்ற 3 ஆண்டுகளில் அனைத்து திருக்கோவில்களும் புரணமைக்கப்பட்டு கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறும் மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

CATEGORIES
TAGS