இருபெரும் விழா – நுகர்வோர் விழிப்புணர்வு விழா மற்றும் பாராட்டு விழா

திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு விழா மற்றும் ஐ.ஐ.பி.இ. லட்சுமி ராமன் சீனியர் செகண்டரி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான பாராட்டு விழா ஆகிய இரு பெரும்விழா சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்விற்கு திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க சேர்மன் மற்றும் ஐ.ஐ.பி.இ.லட்சுமி ராமன் சீனியர் செகண்டரி பள்ளி தாளாளர் எஸ்.ஆர். அனந்தராமன் தலைமை தாங்கினார். வந்திருந்தவர்களை பொதுச் செயலாளர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். பாரதியார் உலக பொதுச் சேவை நிதிய பொதுநிதியாளர். கவிஞர் பாப்பாகுடி, இரா.செல்வமணி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ஃபெட்காட் இந்தியா சேர்மன் மற்றும் சி.சி.ஐ. தேசிய பொதுச் செயலாளருமான எம். செல்வராஜ் நுகர்வோர் விழிப்புணர் குறித்து சிறப்புரையாற்றினார்.ஐ.ஐ.பி.இ.லட்சுமி ராமன் சீனியர் செகண்டரி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு அரும்பாடுபட்ட தாளாளர் எஸ்.ஆர். அனந்தராமன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.நிகழ்வில்
மூத்த வழக்கறிஞர் டி.ஏ.பிரபாகர்,விழிப்புணர்வு இயக்கப் பொருளாளர். அ. பாலசுப்பிரமணியன்மகளிர் அணி பொறுப்பாளர் காஞ்சனா, பணி நிறைவு பெற்ற துணை ஆட்சியர் தியாகராஜன்,உதவி ஆய்வாளர் தளவாய் மாடசாமி, பணி நிறைவு பெற்ற உதவி ஆய்வாளர் பாக்யராஜ், அண்ணா விருது பெற்ற வேல்முருகன், சேவியர் பள்ளி ஆசிரியர் வின்செண்ட்,
பத்தமடை ஆசிரியர் அருணாச்சலம்,கவிஞர் சுப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக மாவட்ட நுகர்வோர் விழிப்புணர் இயக்க துணைச் செயலாளர் கவிஞர் .சு.முத்துசாமி நன்றி கூறினார்.