அம்பாசமுத்திரம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கக்கூடிய நிகழ்வு நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் பரவி வரும் மர்ம,விஷ,டெங்கு காய்ச்சல்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலை நிலவி வருகின்றது. அதனை வருமுன் காக்கும் பொருட்டு, நெல்லை புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, அம்பாசமுத்திரம் நகரம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு கல்யாணி திரையரங்கு எதிரில் நடைபெற்றது. நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்வினை அம்பாசமுத்திரம் சுகாதார ஆய்வாளர் துவங்கி வைத்தார். நிகழ்விற்கு அம்பாசமுத்திரம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர தலைவர் நாசர் அவர்கள் தலைமை தாங்கினார்.
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சமூக ஊடக அணி பொறுப்பாளர் கல்லிடை எம்.எம்.ஷேக், அம்பாசமுத்திரம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர பொருளாளர் எம்.எஸ்செய்யது, வீ.கே.புரம் நகர செயற்குழு உறுப்பினர் ஷானவாஸ், கல்லிடைக்குறிச்சி நகர தலைவர் கலீல், ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகம்மது ஷஃபி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் அம்பை ஜலீல் ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடையும் வகையில் நிலவேம்பு கசாயம் அம்பாசமுத்திரம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் தயார் செய்து வழங்கப்பட்டது.