கூடுதல் அரசு பேருந்து இயக்க கோரிக்கை. மானாமதுரையில் அரசு பேருந்து ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஏற்றி செல்லும் அரசு பேருந்து ஆபத்தான நிலையில் படியில் பயணம் தமிழக அரசு கூடுதலான பஸ் வசதி கொடுத்தால் மட்டுமே விபத்துகளை தவிர்க்க முடியும் எந்த ஒரு பாதுகாப்யின்றி படியில் தொங்கும் பள்ளி மாணவர்கள்.
சிவகங்கையில் இருந்து மானாமதுரை காந்தி சிலை அருகே வரும் பொழுது பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்ததால் வளைவில் பஸ் கவலும் தருணத்தில் படியில் பயணம் பள்ளி மாணவி படியில் தொங்கிக்கொண்டு வந்ததால் அருகில் இருந்த ஒருவர் தாங்கிப் பிடித்த நிலையில்..
படியில் பயணம் தேவர் சிலை முன்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் காவலர் உடனடியாக அருகில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் அரசு பேருந்து நிறுத்தி ஆபத்தான நிலையில் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த பள்ளி மாணவர்களும் பயணிகளையும் இறக்கி மற்றொரு பஸ்ஸில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.
பிறகு பேருந்து நடத்துனர் உடனடியாக தொங்கிக் கொண்டு வந்த அனைவரையும் பஸ்ஸில் உள்ளே அனுப்பிய பிறகு பேருந்து எடுத்து சென்றனர் .
இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருப்பதற்கு கூடுதலான அரசு பஸ் மானாமதுரை இருந்து சிவகங்கை கூடுதலான பஸ் அனுமதித்தால் மட்டுமே இது செயல்களையும் விபத்துகளையும் தவிர்க்கலாம் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வர்கள் கூறி வருகின்றனர். செய்தியாளர் வி ராஜா