BREAKING NEWS

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடத்தப்பட்டது.

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடத்தப்பட்டது.

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் வியாழன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.மகேந்திரன் தலைமை வகித்தார்.

 

ஒன்றிய ஆணையர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், துணைத் தலைவர் இரா.முருகப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 31 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்களை உதவியாளர் திருநாவுக்கரசு வாசித்தார்.கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:

 

ராஜேஸ்வரி (திமுக):கடலங்குடி ரெட்டியார் தெருவில் சாலை அமைக்க வேண்டும். வாணாதிராஜபுரம் பொது மயானத்திற்கு சாலை அமைக்க வேண்டும்.

நாகலட்சுமி(திமுக): திருவாவடுதுறை கீழகாலணித்தெருவில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும்.

சலீமா(சுயே): தேரழந்தூர் கடைவீதியில் கழிவறைகள் கட்ட வேண்டும்.

பத்மாவதி (அதிமுக): தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பலருக்கு சம்பளம் கிடைக்கவில்லை.

புவனேஸ்வரி (திமுக):கடக்கம் ஊராட்சி செயலர் இதுவரை பணியில் சேரவில்லை.

 

ரமேஷ்(திமுக): தத்தக்குடி மலைக்குடியில் சாலை அமைக்க வேண்டும். தத்தக்குடியில் பள்ளி அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டி உடையும் நிலையில் உள்ளது. உடனடியாக சரி செய்ய வேண்டும்.

 

வினோத்(பாஜக): சாலைகள் அமைப்பதற்கு முன் மண் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப சாலை அமைக்க வேண்டும்.

சிவகுமார் (பாமக):
கீழ அகலங்கன்னில் புதிய ரேஷன் அங்காடி கட்டவேண்டும்.ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

செழியன்(அதிமுக): பாலையூர் வடக்கு தெருவில் உடனடியாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.கோடிமங்கலம் மாதா கோவில் தெருவில் சாலை அமைக்க வேண்டும்.

 

பாஸ்கரன்(அதிமுக):  கீழ பெரம்பூரில் அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். சேத்தூர் மஞ்சக்கொல்லையில் சாலை அமைப்பதில் உள்ள பிரச்சினையை தீர்த்து சாலை அமைக்க வேண்டும். பாலூர்-பெரம்பூர் சாலையில் மின்வசதி செய்து தரவேண்டும்.

சத்யா(அதிமுக): கப்பூர் ஊராட்சி பாரதிதாசன் நகர், சிவன் கோவில் தெரு, கந்தமங்கலம் கீழ்த் தெரு ஆகியவற்றில் தார் சாலை அமைக்க வேண்டும்.

ராமதாஸ்(திமுக): திருமணஞ்சேரி தோப்பு த்தெருவில் சாலை அமைக்க வேண்டும்.

தலைவர்: அனைத்து உறுப்பினர்களின் பாரபட்சமின்றி கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும்.

இக்கூட்டத்தில் பல்வேறு அரசுதுறை அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணிதள பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

 

CATEGORIES
TAGS