ரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ் ஆட்சி மொழி செயலாக்கத்தில் அரசு பணியாளர்கள் காட்டும் ஆர்வம் போதுமானது!!! போதுமானதல்ல!!! என்ற தலைப்பில் பட்டிமன்றம்.
அரசின் தமிழ்த்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 01.03.2023 முதல் 08.03.2023 வரை ஆட்சி மொழி சட்ட வார விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழி செயலாக்கத்தில் அரசு பணியாளர்கள் தமிழில் காட்டும் ஆர்வம் போதுமானது.
போதுமானது அல்ல என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் அரசு மகளிர் கல்லூரி முனைவர் லதா பூரணம் தலைமை வைத்தார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் இளங்கோவன் சிறப்புரை ஆற்றி பட்டிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
பட்டிமன்ற நடுவராக புலவர் குயிலன் தமிழ் ஆசிரியர் (பணி நிறைவு) திண்டுக்கல். பட்டிமன்ற பேச்சாளராக பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். பட்டிமன்றம் நடுவர் குயிலன் இறுதியில் தமிழ் ஆட்சி மொழி செயலாக்கத்தில் அரசு பணியாளர்கள் காட்டும் ஆர்வம் “போதுமானதல்ல” என தீர்ப்பளித்தார்.
பட்டிமன்றத்தில் பங்கேற்ற பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ம.ராஜா.