BREAKING NEWS

பேரணாம்பட்டு தாலுகாவில் உதவித்தொகை வழங்குவதில் கால தாமதம் ஊனமுற்றோர்கள், முதியோர்கள் அவதி.

பேரணாம்பட்டு தாலுகாவில் உதவித்தொகை வழங்குவதில் கால தாமதம் ஊனமுற்றோர்கள், முதியோர்கள் அவதி.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர்கள், உடல் ஊனமுற்றோர்கள், விதவைகள் மற்றும் முதிர்கன்னிகள் தமிழக அரசு வழங்கும் உதவித்தொகைகளை பெற்று வருகின்றனர்.

 

ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி முதல் 7 8 தேதிக்குள்ளாக உதவி தொகைகள் வழங்கப்பட்டு விடும். அதிலும் குறிப்பாக வணிக தொடர்பாளர்களான சுரேஷ், குட்டிபாபு, பாஸ்கரன், சுஹேல் அகமத், ஆகியோர்கள் ஒன்றாம் தேதி முதலில் உதவித்தொகைகளை வழங்க ஆரம்பித்து விடுவார்கள்.

 

ஆனால் இந்த மாதம் தேதி 8 ஆகியும் இன்னமும் உதவி தொகைகள் வழங்கவில்லை. டீ குடிக்கவும் பசிக்கு உணவு அருந்தவும் அண்ணன் தம்பிகளையோ அக்கா தங்கைகளையும் மற்றுமுள்ள உறவினர்களையோ எதிர்பாராமல் உதவித்தொகைகளை நம்பி மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் மேற்கண்ட நபர்களுக்கு இன்னமும் உதவித்தொகை கிடைக்காததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.

 

எனவே இது குறித்து மேற்கண்ட நபர்களுக்கு உடனே உதவித்தொகை கிடைத்திட வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன்  அவர்களும் பேரணாம்பட்டு சமூகத் திட்ட பாதுகாப்பாளர் சிவ சண்முகம் அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உதவித்தொகை பெறும் பயனாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

CATEGORIES
TAGS