BREAKING NEWS

தரங்கம்பாடியில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம்- இரட்டை மடி வலை, அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட படகுகளை தடை செய்ய தீர்மானம்.

தரங்கம்பாடியில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம்- இரட்டை மடி வலை, அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட படகுகளை தடை செய்ய தீர்மானம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி திருமண மண்டபத்தில் கிராமத்தில் மாவட்ட மீனவர் கிராம பிரதிநிதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் தரங்கம்பாடி, சின்னூர் பேட்டை, குட்டியாண்டியூர், பெருமாள் பேட்டை, வெள்ளக்கோயில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, கீழ மூவர்கரை, வானகிரி உள்ளிட்ட 19 மீனவ கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

நீண்ட விவாதத்திற்கு பிறகு கூட்டத்தின் முடிவில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மற்றும் பழையாறு துறைமுகத்திலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடி வலை மற்றும் அதிவேக என்ஜின் பொருத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை கொண்டு மீன்பிடிப்பதை முழுவதுமாக தடை செய்ய வேண்டி வரும் திங்கட்கிழமை அனைத்து மீனவ கிராமங்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

CATEGORIES
TAGS