சந்திரபாடி கிராம ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு.
![சந்திரபாடி கிராம ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு. சந்திரபாடி கிராம ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு.](https://aramseithigal.com/wp-content/uploads/2023/03/WhatsApp-Image-2023-03-11-at-18.53.28.jpeg)
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், சந்திரபாடி கிராம ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த வாரம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சந்திரபாடி ஊராட்சி மன்றத்தலைவர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தங்களது ஊராட்சியில் உள்ள சில பிரச்சனைகளை எடுத்துக் கூறியதன் பெயரில் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பிரதான குடிநீராக பயன்படுத்திக் கொண்டிருந்த கிணற்றை நேரில் சென்று பார்வையிட்டு, அதனை தூர்வாரி சீரமைக்கும் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட சீரமைக்கும் பணியினை சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், இக்கிராம பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் இருந்து வரும் தண்ணீரை சுவைத்து பார்த்து விரைவில் இதற்கான தீர்வு மேற்கொள்ளப்படும் என்றும்,
அங்குள்ள கடற்கரைக்குச் சென்று மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தும், கடலறிப்பை தடுக்க தக்க நடவடிக்ககை எடுக்கப்படும் என்றும், புயல் பாதுகாப்பு மையத்தினையும், சிதலமடைந்த உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் சந்திரபாடி கிராம மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வாக உப்புநீரை குடிநீராக மாற்றும் சுத்திகரிப்பான் அமைக்கவும், மழைநீரை சேமிக்க ஆங்காங்கே தடுப்பணைகள் மற்றும் குளங்கள் வெட்டவும், சிதலமைந்த பள்ளி கட்டிடங்கள் விரைவில் சீரமைக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இவ்வாய்வின்போது, ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர் ஸ்ரீலேகாதமிழ்ச்செல்வன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, தரங்கம்பாடி வட்டாட்சியர் காந்திமதி, சந்திரப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் பிரமிளா ராஜ்குமார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.