BREAKING NEWS

விக்கிரவாண்டி சாலைப் பணிகளில் தாமதம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற உறுதிமொழி ஆணையர் கோரிக்கை.

விக்கிரவாண்டி சாலைப் பணிகளில் தாமதம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற உறுதிமொழி ஆணையர் கோரிக்கை.

தஞ்சாவூர்- விக்கிரவாண்டி சாலைப் பணிகல் தாமதம்..

 
மண், மணல் தட்டுப்பாடு மற்றும் நீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்குகள் ஆகியவை காரணமாக தஞ்சாவூர்-கும்பகோணம் விக்கிரவாண்டி நான்குவழிச் சாலைப் பணிகளை மேற்கொள் வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 

குறுகலாக இருந்த இந்தச் சாலையை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நான்குவழிச் சாலை யாக மாற்ற முடிவு செய்து, 2017-ல் ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து கடந்த . 2018 ல் பணிகள் தொடங்கின.

 

இதில், ரூ.71 கோடியில் விக்கிர வாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரை 66 கி.மீ தொலைவுக்கும், ரூ.1,461 கோடியில் சேத்தியாத் தோப்பு முதல் கும்பகோணம் தாராசுரம் வரை 50.275 கி.மீ தொலைவுக்கும், ரூ.1,345 கோடியில் தாராசுரம் முதல் தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் புளியந்தோப்பு வரை 48 கி.மீ தொலைவுக்கும் 180 அடி அகலத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்த நிலையில் உயர்நீதிமன்ற உறுதிமொழி ஆணையரும், நோட்டரி வழக்கறிஞர் ஏ.அருள்தாஸ் தமிழக முதல்வர்க்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

 

சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்னர்.மேலும், மண் மற்றும் மணல் தட்டுப்பாடு காரணமாகவும் பணிகள் தாமதமாகின்றன. இப்பணிகள் இந்த ஆண்டு முடிவுக்குள் பயன்பாட்டுக்கு வந்து விடவேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.ஆனால் பணிகள் தாமதத்தால்
வருகிற 2025 ல் முடிவு பெறுமா என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

எனவே, விக்கிரவாண்டி-தஞ்சாவூர் நான்கு வழிச்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கடந்த மார்ச் 1-ம் தேதி கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS