மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி மற்றும் லயம் குரூப்ஸ் இணைந்து மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை நடத்தினர்.
இதில் இளங்கலை, இளம்அறிவியல், முதுகலை மற்றும் முதுஅறிவியல் இறுதியாண்டு படிக்கும் 320 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் இவ்வேலை வாய்ப்பு முகாமிற்கு எட்டிற்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து மனிதவள மேலாளர்கள் R.சுகுமார், திரு.விவேக், ஜெனில் ஆன்டோ மற்றும் ராஜேஷ் ஆகியோர்கள் மாணவர்களுக்கு வந்து நேர்முக தேர்வு நடத்தி மாணவர்களின் சுய விபரப்பட்டியல்களை பெற்றுக் கொண்டனர்.
பேராசிரியர். Dr. கௌரி ஆனந்த், பேராசிரியர்.Dr. M. ஜான்சன் ஜெயக்குமார், IQAC ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர். Dr. ஜீன் ஜார்ஜ் அவர்கள் துவங்கி வைத்து வேலை வாய்ப்பின் நோக்கத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
பேராசிரியர்கள். செல்வராஜ் மற்றும் ஜான்சன் சங்கீதராஜ் ஆகியோர்கள் வேலைவாப்பில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்களையும் அறிவுரைகளையும் வழங்கினர்.
இந்த மாபெரும் வேலை வாய்ப்பு நிகழ்ச்சியினை கல்லூரி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் ஒருங்கிணைப்பாளர். பேராசிரியர்.செல்வராஜ் மற்றும் ஆங்கிலதுறை பேராசிரியர். M. ஜான்சன் சங்கீதராஜ், ஆகியோர்கள் சிறப்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தும் ஏராளமான மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
செய்தியாளர் க.கார்முகிலன்.