நீ பாஜக வா இரு, எந்த பயலாக இரு .. அதை பற்றி கவலை இல்லை… எது அதிமுக என்று தெரியால் பாஜக அரசியல் செய்ய கூடாது-முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் பாஜக , அண்ணாமலை குறித்து சில கருத்துக்களை பேசியிருந்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தைச் சேர்ந்த பாஜக மண்டல் ஒன்றிய பொதுச் செயலாளர் காளிராஜ் என்பவர் அந்தக் கூட்டத்தில் பேசிய தொடர்பாக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனிடம் செல் போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.
அப்போது பேசிய சண்முகநாதன் அதிமுக என்றால் எது என்று தெரியுமா அதிமுக என்பது எடப்பாடி பழனிச்சாமி கிட்ட இருக்கு.. நீங்க (பாஜக) ஓபிஎஸ் பாத்துட்டு , ஓபிஎஸ் -இபிஎஸ் என்று பேசிகிட்டு இருக்கீங்க..
நீ பாஜகவாக இரு, எந்த பயலாக இரு .. அதை பற்றி கவலை இல்லை… அதிமுகவில் 2,600 பொது குழுவில், 2,500 பொதுக்குழு உறுப்பினர் எங்களிடம் உள்ளனர்.. மாவட்டச் செயலாளர் 76 பேரில், 71 பேர் உள்ளனர். அதேபோன்று சட்டமன்ற உறுப்பினர்கள் 75 பேரில் 71 பேர் எங்களிடம் உள்ளனர்..
அப்படின்னா எது அதிமுக.. இது தெரியாம பிஜேபி அரசியல் செய்யக்கூடாது என்று பேசியுள்ளார்.. பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.