திருச்சி காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்.
திருச்சி மாவட்டம்,
பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன இந்நிலையில் இன்று திருச்சி திருவெறும்பூர் காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அப்போது உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மாநில அரசு தலையிட்டு தேர்வு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று மனித சங்கிலியாக நின்று எதிர்ப்பை தெரிவித்தனர்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வரும் 17ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.