ராணிப்பேட்டையில் நயாரா பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்களுக்கு கழிப்பீட வசதிக்கு அனுமதி இல்லை என நிர்வாக அராஜகம்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா, ராணிப்பேட்டையில் நயாரா பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்களுக்கு கழிப்பீட வசதியை அனுமதிக்காமல் அராஜகமாக செயல்படுவதோடு பெட்ரோல் பங்க் ஆண், பெண் இரு கழிப்பீடத்திலும் பூட்டு போட்டு பூட்டி வைத்து,
பெட்ரோல் போடுபவர்கள் மட்டும் எப்பொழுது கேட்டாலும் தண்ணீர் இல்லை பயன்படுத்த முடியாது, நீங்கள் பயன்படுத்துவதற்கு அல்ல எங்களுக்குத் தான் என அராஜகமாக பேசி செயல்படுத்தப்படும் இந்த நிர்வாக பெட்ரோல் பங்கினை அரசு விதிமுறையை கடைபிடிக்காமல்,..
வாடிக்கையாளர்களிடம் அராஜகமாக பேசும் இந்த பங்க்கின் மீது உரிய நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியரும் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து விதி மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் மூடி சீல் வைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.