அந்தியூர் அருகே சேதமடைந்த பாலத்தை சீரமைத்துக் கொடுக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் செலம்பூர் அம்மன் கோவிலில் இருந்து வரட்டு பள்ளம் சோதனைச் சாவடி பகுதிக்கு செல்லும் சாலையில் வழுக்குப் பாறையில் இருந்து எண்ணமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வரும் பள்ளம் உள்ளது.
இப்பள்ளத்தின் இடையே செலம்பூர் அம்மன் கோவில் அருகே பாலம் உள்ளது இப்பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்த கனமழையால் சேதம் அடைந்து விட்டது இதனால் இப்பகுதியில் கனரக வாகனம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
CATEGORIES ஈரோடு
TAGS ஈரோடு மாவட்டம்எண்ணமங்கலம்செலம்பூர் அம்மன் கோவில்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பாலத்தை சீரமைக்க கோரிக்கைபாலம்முக்கிய செய்திகள்வழுக்குப் பாறை