ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் இந்திய மற்றும் தமிழக கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்றி வாழ்ந்து வருவதால் ஆன்மீக நிம்மதி தேடி வந்ததாக தகவல்:-

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயம் உள்ளிட்டவற்றில் சாமி தரிசனம் செய்து வழிபாடு, இந்திய மற்றும் தமிழக கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்றி வாழ்ந்து வருவதால் ஆன்மீக நிம்மதி தேடி வந்ததாக தகவல்:-
ஆஸ்திரியா நாட்டை சார்ந்த ஸ்வெட்லானா க்ரூசர் ரஷ்யா நாட்டை சார்ந்த இலோனா ஆகிய இருவரும் இந்தியா மற்றும் தமிழக கலாச்சாரம் மற்றும் வழிபாடு மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை பார்த்து வரும் இவர்கள், இந்தியா முழுவதும் கடந்த 10 நாட்களாக ஆன்மீக சுற்றுலா சென்று வருகின்றனர்.
தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு ஆலயங்களுக்கும் சென்று வரும் இவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடையில் அமைந்துள்ள பரணி நட்சத்திர பரிகார ஆலயமான ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். அவர்களுக்கு கிராம பொதுமக்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்த இரண்டு பெண்களும் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். தொடர்ந்து மயூரநாதர் ஆலயத்தில் தரிசனம் செய்த இவர்கள் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தின் இரண்டாம் கால யாகசாலை பூஜையில் பங்கேற்று மனமுருக வழிபாடு செய்தனர்.
இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரம் தங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருப்பதாகவும் ஆன்மீக வழியை பின்பற்றி வருவதாகவும் ஆன்மீக நிம்மதி தேடி 40-க்கும் மேற்பட்ட ஆலயங்களில் தரிசனம் செய்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.