BREAKING NEWS

குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து அங்கிருந்த நோயாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கேட்டறிந்து ஆய்வு.

குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து அங்கிருந்த நோயாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கேட்டறிந்து ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

 

தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் கழிவறை கட்டும் பணி மற்றும் சாலை உள்ளிட்ட பணிகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் குத்தாலம் அரசு மருத்துவமனையில் தாய் செய் உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

 

 

போதிய மருத்துவர்கள் பணியில் அமர்த்த வேண்டும் என அவ்வப்போது பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அங்கிருந்த நோயாளிகளிடம் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்படுகிறதா என ஆட்சியர் கேட்டறிந்தார்.

 

 

மஞ்சப்பை பயன்படுத்தும் நோக்கில் புதிய துணிப்பை விற்பனை இயந்திரத்தை பேரூராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் திறந்து வைத்தார். இந்த ஆய்வின்போது குத்தாலம் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் மற்றும் செயலாளர்கள் ரஞ்சித் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

CATEGORIES
TAGS