BREAKING NEWS

பாபநாசம் கோவில் சுற்றியுள்ள ஆற்று படுக்கைகளில் குப்பைகள்: சுத்தப்படுத்தும் பணியில் பணியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை.

பாபநாசம் கோவில் சுற்றியுள்ள ஆற்று படுக்கைகளில் குப்பைகள்: சுத்தப்படுத்தும் பணியில் பணியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மணிமுத்தாறு தாசிகா பனிரெண்டாம் அணி காவலர்கள் பாபநாசம் கோவில் சுற்றியுள்ள ஆற்று படுக்கைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்தப்பட்ட பழைய துணிகள் ஆற்றின் கரையோர பகுதிகளில் குவிந்து கிடந்து தூர்நாற்றம் வீசியது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூராகவும், அசுத்தமாகவும் பார்ப்பதற்கு முகம் சுழிக்கும் வகையில் இருந்தது.

 

 

இதை நேரில் பார்த்த சமூக ஆர்வலர்கள் த.சி.கா.12-ம் அணி தளவாய் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டு கொண்டதன் பேரில் , தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12-ம் அணி சார்பாக தளவாய் கார்த்திகேயன் அவர்கள் வழிகாட்டுதலின் படி அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஆற்று படுக்கைகளை சுத்தம் செய்து குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் 300 டன் பயன்படுத்தப்பட்ட பழைய துணிகள் அனைத்தையும் ஆற்றில் இருந்து எடுத்து சுத்தம் செய்ததுடன், புதர் மண்டியிருந்த பகுதிகளையும் வெட்டி சுத்தம் செய்தனர்.

 

சுத்தப்படுத்தும் பணியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12-ம் அணி தளவாய் கார்த்திகேயன், 05 காவல் அதிகாரிகள், 85 ஆளிநர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு , சுத்தம் செய்தனர்.

 

 

சுத்தப்படுத்தும் பணியை நேரில் பார்வையிட்ட திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் டாக்டர்.திரு.K.P. கார்த்திகேயன், IAS அவர்கள் த.சி.கா.12-ம் அணி தளவாய் திரு.த.கார்த்திகேயன அவர்களுக்கு உங்களின் சமூக பணி மென்மேலும் சிறக்க வாழ்த்து தெரிவித்ததுடன் கேடயம் வழங்கி கவுரவித்தார். மேலும் அங்கு சுத்தப்படுத்தும் பணியில் இருந்த காவல்துறை, சமூக ஆர்வலர்கள் கூடல் அரசன் மற்றும் கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டார்.

 

இந்நிகழ்வினை பொதுமக்கள் தமிழக காவல் துறையினருக்கும், த.சி.கா.12-ம் அணி தளவாய்.திரு.த.கார்த்திகேயன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டனர்.

CATEGORIES
TAGS