BREAKING NEWS

போதை பொருள்கள் ஒழிப்பு குறித்து கல்லூரி முதல்வர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

போதை பொருள்கள் ஒழிப்பு குறித்து கல்லூரி முதல்வர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுரிகளிலும் போதைப்பொருள் தடுப்பு குழு அமைப்பது தொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு குழு அமைப்பது பற்றியும், குழுவின் நோக்கம் பற்றியும், குழு உறுப்பினர்கள் பற்றியும், குழுவின் செயல்பாடுகள் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் 14 கல்லூரி முதல்வர்கள் மற்றும் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS