BREAKING NEWS

வாலாஜா அடுத்த திருபாற்கடல் பாலாற்றின் குறுக்கே ரூ.47¾ கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு!!!

வாலாஜா அடுத்த திருபாற்கடல் பாலாற்றின் குறுக்கே ரூ.47¾ கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு!!!

ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல்-வளவனூர் கிராமங்களுக்கு இடையே பாலாற்றின் குறுக்கே நபார்டு நிதியுதவியின் கீழ் ரூ.47 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அப்போது இந்த தடுப்பணை பணிகள்குறித்து நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் கலெக்டரிடம் விளக்கினார். அவர் கூறுகையில் இந்த தடுப்பணையில் 2,088.88 மில்லியன் கன அடி நீர் சேமிக்க இயலும். இதன் மூலம் அப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு பாலாற்றின் இருபுறங்களிலும் உள்ள 6 கிராமங்கள், 306 கிணறுகள் மற்றும் 45 உரைகிணறுகளின் நீர்மட்டம் உயரும்.

 

இதன் மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதிபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2024-க்குள்… தடுப்பணை அமைப்பதின் மூலம் சுமார் 1,487 விவசாயிகள், 418 லட்சம் பொதுமக்கள் குடிநீர்வசதி பெற்று பயன்பெறுவார்கள். அருகில் உள்ள இரண்டு கசக்கால்வாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு அதன் வாயிலாக 300 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசனவசதி பெறும்.

 

 

6.12.2024-க்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என தெரிவித்தார் ஆய்வின் போது அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, நீர்வளத்துறை உதவி பொறியாளர்கள் மெய்யழகன். சந்திரன், தாசில்தார் சுமதி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர் நெமிலி அதேபோன்று நெமிலி கொசஸ்தலை ஆற்றில் கரியாக்குடல்-கீழ்வெங்கடாபுரம் இடையே ரூ.7 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும்பணியையும் கலெக்டர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

 

அப்போது பொதுபணித்துறை அதிகாரிகளிடம் அணை கட்டுமான தொழில்நுட்பங்களை கேட்டறிந்தார். மேலும் இப்பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த தடுப்பணையின் மூலம் கீழ்வெங்கடாபுரம், ஆட்டுப்பாக்கம், சயனபுரம், கரியாகுடல் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசனவசதிபெறும்.

 

குடிநீர் கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது கீழ்வெங்கடாபுரம் கிராமநிர்வாக அலுவலர் கோபிநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

CATEGORIES
TAGS