BREAKING NEWS

ஒழுகைமங்கலம் சீதளாபரமேஸ்வரி ஆலய பங்குனி பெருந்திருவிழா பூச்செரிதல்.

ஒழுகைமங்கலம் சீதளாபரமேஸ்வரி ஆலய பங்குனி பெருந்திருவிழா பூச்செரிதல்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்கலம் கிராமத்தில் சிறப்பு பெற்ற சீதளாபரமேஸ்வரி மாரியம்மன் கோயில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோயில் சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. புகழ்பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பங்குனித் திருவிழாவை முன்னிட்டு வருகிற 2-ஆம் தேதி கொடியேற்று விழா நடைபெறுகிறது.

 

அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேர் திருவிழா, உதிரவாய் துடைப்பு உற்சவம், மஞ்சள் நீர் உற்சவம் போன்றவை சிறப்பாக நடத்தப்படுகிறது. அப்போது பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் பால்குட காவடி, அலகு காவடி, பாடை காவடி எடுத்து வந்து சாமி வழிபாடு செய்வார்கள்.
இந்நிலையில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

 

 

 

இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சீதளா பரமேஸ்வரி அம்மனை எழுந்தருள செய்து மேளதாளங்கள் முழங்க வீதி உலா காட்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள், வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பல்வேறு வகையான மலர்களை எடுத்து சென்றனர்.

 

தொடர்ந்து அம்மனுக்கு பால், தேன், சந்தனம், இளநீர், மஞ்சள்பொடி, திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வெள்ளிக்கவசம் அணிவித்து வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் கொண்டு வந்த மலர்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்வு நடைபெற்றது.

 

 

தொடர்ந்து சாமிக்கு ஐந்தடுக்கு தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக ஏராளமான பெண் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர் இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி வழிபாடு செய்தனர்.

 

CATEGORIES
TAGS