BREAKING NEWS

பவானி நகர அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

பவானி நகர அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஈரோடு மாவட்டம்; பவானி நகர அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்டு இருந்தார் இதனை எதிர்த்து ஓபிஎஸ் அணியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர்.

 

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று இரு தரப்பு வாதங்கள் முடிந்து செவ்வாய்க்கிழமை அன்று தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

 

இன்று உயர் நீதிமன்றத்தின் வாயிலாக அதிமுக பொது குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லுபடி ஆகும் என தீர்ப்பு வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்டது.

 

இதனை கொண்டாடும் வகையில் பவானி நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி. நாத் (எ) மாதையன், ராஜேந்திரன், மம்மி டாடி மூர்த்தி, பூக்கடை மாதேஸ்வரன், அர்ஜுனன், பிரகாஷ், பிரபாகரன், உட்பட பல்வேறு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS