BREAKING NEWS

நிலக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்.

நிலக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால் ரோட்டில் அ.தி.மு.க.வினர் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றதை கொண்டாடும் விதமாக நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

 

 

திண்டுக்கல் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் உதயகுமார்,மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி,மாவட்ட கவுன்சிலர் ராஜா மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் சிமியோன் ராஜா ஆகியோர்கள் முன்னிலையில் வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் நிலக்கோட்டை நால்ரோடு முன்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் எடப்பாடி வாழ்க என கோசமிட்டனர்.

 

இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் தவமணி,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாலசுப்பிரமணியம், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்க பாண்டியன், நிலக்கோட்டை நகரப் பொருளாளர் பூக்கடை சரவணன்,

 

 

நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் முனியப்பன்,ஓட்டுநர் ஒன்றிய செயலாளர் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் ம.ராஜா.

CATEGORIES
TAGS