BREAKING NEWS

விரைவு ரயிலை நிறுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில இளைஞரை மீட்டு 3 மாதம் சொந்த மாநிலததிற்கு அனுப்பிய கருணை இல்லத்தினர் மற்றும் காவல்துறையினர்.

விரைவு ரயிலை நிறுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில இளைஞரை மீட்டு 3 மாதம் சொந்த மாநிலததிற்கு அனுப்பிய கருணை இல்லத்தினர் மற்றும் காவல்துறையினர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் முன்பு நின்றுள்ளார்.

 

இதனை கண்ட இரயில்வே ஊழியர்கள் அந்த இளைஞரை மீட்டு ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

 

அந்த இளைஞரிடம் விசாரணை மேற்க்கொண்ட போது அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வாணியம்பாடியில் உள்ள கருணை இல்லம் என்ற காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

 

பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை கருணை இல்ல இயக்குநர் டேவிட் சுபாஷ் மேற்பார்வையில் ஒரு மாத காலமாக வடமாநில இளைஞருக்கு உரிய சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சையில் இருந்த வடமாநில இளைஞர் மனநலம் முற்றிலும் குணமாகிய பின்னர் அவரிடம் விசாரணை மேற்க்கொண்ட போது அவர் பெயர் சிவதாஸ் பண்டாரி என்பதும் ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் அடுத்த சிறிய கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் , அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

 

மேலும் அவர் தனது கிராமத்தில் முடிதிருத்தும் பணி செய்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் முழுவதுமாக மனநலம் தேறிய சிவதாஸ் பண்டாரி கருணை இல்லத்தில் உள்ள நபர்களுக்கு கடந்த சில மாதங்களாக முடி திருத்தும் பணியில் ஈடுப்பட்டும் வந்துள்ளார்.

 

மேலும் சிவதாஸ் பண்டாரியை சொந்த கிராமத்திற்கு அனுப்ப மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கருணை இல்ல நிர்வாகிகள் முயற்சிகள் மேற்க்கொண்டு வந்த நிலையில்,
சிவதாஸ் பண்டாரியை ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இன்று கருணை இல்ல நிர்வாகிகள் மற்றும் வாணியம்பாடி காவல்துறையினர்.

 

சிவதாஸ் பண்டாரியை அவரது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் அடுத்த சிறிய கிராமத்திற்கு வாணியம்பாடி ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் சிவதாஸ் பண்டாரியை அனுப்பி வைத்தனர்.

CATEGORIES
TAGS