உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் போக்சோ சட்டத்தில் கைது

திருப்பூர் மாவட்டம்;
உடுமலைப்பேட்டை அடுத்த மானைப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் தங்கராஜ் கூலித் தொழிலாளியான இவர் பகுதியில் உள்ள பள்ளியில் 12 வகுப்புபடித்து வந்த சிறுமியைகாதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புபள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாதால் சிறுமியின் பெற்றோர்களும் உறவினர்களும் உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அதே பகுதியை சார்ந்த கூலித் தொழிலாளி தங்கராஜ் என்பவர் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு தங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்து உடுமலைப்பேட்டை நீதிமன்ற நீதிபதி முன்பு ஆதார் படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்து சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
