சின்ன கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த சின்ன கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா தயாளன், ஒன்றிய கவுன்சிலர் பன்னீர்செல்வம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராசாத்தி, கல்வியாளர் வெங்கடேசன், துணை தலைவர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் அமிர்தம் ராஜேந்திரன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.இதில் பகண்டை கூட்டு சாலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயராமன் உள்ளிட்ட தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர்கள் சத்துணவு உதவியாளர் மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினார்கள்.
மேலும் ஆண்டு விழா அறிக்கை மலர் பல்வேறு கலை நிகழ்ச்சி நாடகங்கள்,ஒப்புவித்தல் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியின் உதவி ஆசிரியை பிரிஸ் கில்லால் அன்ன புஷ்பம் நன்றி கூறினார்.