பாபநாசம் ஆர்டிபி கல்லூரியில் போட்டி தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு பயிற்சி.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ஆர் டி பி கல்லூரியும் விவேகானந்தா ஐ ஏ எஸ் அகடாமி மற்றும் ஆஸ்கர் இன்ஸ்டிடியூட் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு அரசு போட்டி தேர்வுகளை பற்றி விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆர்டிபி கல்லூரி தாளாளர் தாவுத்பாட்ஷா தலைமை வகித்தார். கல்லூரி இயக்குனர் காரல்மார்க்ஸ், பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் விவேகானந்தா ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தங்க. கண்ணதாசன் கலந்து கொண்டு பேசிதாவது 10 ம் வகுப்பு படித்தவர்கள், மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் போட்டி தேர்வுகள் எழுதுவதற்கு உள்ள வாய்ப்புகள் பற்றியும், மாணவிகள் ஒவ்வொருவரும் சாதிக்க வேண்டும் என பல உதாரணங்களுடன் எடுத்து கூறினார்.
குரூப்-1ல் இருந்து குரூப் 8 வரை தேர்வுகள் நடக்கின்றது, மாநில அரசு நடத்தும் போட்டி தேர்வுகள், மத்திய அரசு நடத்தும் தேர்வுகள் என்ன, என்ன பதவிகளுக்காக தேர்வுகள் நடைபெறுகிறது. எவ்வாறெல்லாம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், இந்த தேர்வுகளில் வெற்றி பெற நாம் எவற்றையெல்லாம் படிக்க வேண்டும் எப்படி படிக்க வேண்டும், எவ்வாறு தேர்வு எழுத வேண்டும் என்பன பற்றியும் மாணவ, மாணவிகளுக்கு கும்பகோணம் ஆஸ்கர் இன்ஸ்டிட்யூட், மற்றும் பாபநாசம் விவேகானந்தா ஐஏஎஸ் அகாடமி பயிற்றுநர்கள் லட்சுமிபிரியா, சுபலட்சுமி, சூர்யா பிரகாஷ் பரிமளா, ஆகியோர் போட்டித் தேர்வுகள் பற்றி விளக்கி பேசினார்கள்.
மேலும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஹரிஹரன், விஸ்வேஸ்வரன் தங்கள் அனுபவங்கள் பற்றியும் எடுத்துக் கூறினர். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் விவேகானந்தா தொண்டு நிறுவன நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் நிறைவாக கல்லூரி பேராசிரியர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.