தலைக்கவசம் அணிந்தால், ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜோதி அறக்கட்டளை.
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகாசம் அணிய வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தலைகவசம் அணிய வலியுறுத்தியும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை அண்ணா சிலை அருகே தலைக்கவசம் அணிந்து வரும் பெண்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் அவர்கள் தங்கள் குடும்பத்தினரும் இருசக்கர வாகனத்தில் செல்ல போது தலைகவசம் அணிந்து செல்ல அவர்கள் வற்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இலவச பெட்ரோல் வழங்கப்பட்டதாகவும் ஜோதி அறக்கட்டளை நிறுவனர் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 90 சதவீதம் பேர் தலைக்கவசம் அணிந்து வருவதாகவும், இதனால் தஞ்சையில் விபத்து குறைந்துள்ளதாகவும் போக்குவரத்து காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்கட்டாயம் தலைகாசம்தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளைதஞ்சாவூர் போக்குவரத்து காவல் பிரிவுதஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைக்கவசம் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்தலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்