பேரணாம்பட்டு புதிய ரோட்டரி சங்க பதவியேற்பு விழா.
![பேரணாம்பட்டு புதிய ரோட்டரி சங்க பதவியேற்பு விழா. பேரணாம்பட்டு புதிய ரோட்டரி சங்க பதவியேற்பு விழா.](https://aramseithigal.com/wp-content/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-08-at-14.45.22.jpeg)
வேலூர் மாவட்டம்;
பேரணாம்பட்டு ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக டாக்டர் M.பிரபாத் குமார் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான A.P .நந்தகுமார் தலைமை தாங்கினார்.
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர். அமுலு விஜியன். பேரணாம்பட்டு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பொகளூர்.K. ஜனார்த்தனன், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் M.டேவிட், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எருக்கம்பட்டு D.விஜயகுமார், நகர மன்ற துணைத் தலைவரும் பேரணாம்பட்டு நகர திமுக செயலாளருமான ஆலியார் ஜுபேர் அஹமத் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
பேரணாம்பட்டு ரோட்டரி சங்கத்தின் புதிய செயலாளராக முன்னால் நகர மன்ற உறுப்பினர். சாம்ராஜ். பொருளாளராக முன்னாள் ஸ்டேட் வங்கியின் மேலாளர்.K. சுந்தரேசன். ஆகியர்கள் பதவியேற்று கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகர திமுக நிர்வாகிகளான D. அப்துல் ஜமீத்O.T.முன்னா, R.மங்கள ராஜவேலு, கோ.சரவணன். ஒன்றிய திமுக தகவல் துறை அமைப்பாளர் பாலூர் S.ரமேஷ்.உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.