BREAKING NEWS

வாணியம்பாடி அருகே விடுதலை சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்ட பேனர் கிளிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாணியம்பாடி அருகே விடுதலை சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்ட பேனர் கிளிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேனர் கிளித்ததாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீலச்சட்டை பேரணி நடத்த போவதாக ஒட்டப்பட்டிருந்த பேனரை கிழித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அம்பலூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த குமார் மற்றும் கௌதம் ஆகிய 2 பேரை போலிசார் கைது செய்தனர்.பின்னர் அதே இடத்தில் புதிய பேனரை ஒட்டவைத்தனர்.

 

இந்நிலையில் கைது செய்தவர்களை விடுவிக்ககோரி கைதான இருவரின் உறவினர்கள் புத்துகோவில் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பலூர் போலிசார் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் போலிசார் அதிக அளவு குவிக்கப்பட்டு போராட்டத்தை கலைத்து அருகே உள்ள கடைகளை போலிசார் வலுக்கட்டாயமாக அடைக்க வைத்தனர்.

 

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன் சம்பவ இடத்தில் நிலவி வரும் சூழல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்துறையினர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மீண்டும் ஒட்டிய பேனரை அகற்றினர்.

 

பேனர் அகற்றிய பிரச்சினை பூதாகரமாக வெடித்து போராட்ட களமாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS