BREAKING NEWS

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்கு இளஞ்சூடு ஏற்றும் விழா.

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்கு இளஞ்சூடு ஏற்றும் விழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது ஆலை நிறுவப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் 2023-2024 நடப்பாண்டு காண கரும்பு அரவை துவங்குவதற்காக முதல் கட்ட பணியாக ஆலையின் பாயிலர்களை சூடேற்றும் இளஞ்சூடு ஏற்றும் நிகழ்ச்சி ஆலையில் நிகழ்வில் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவரும் சண்முகவேலு, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன் விவசாயிகள், ஆலை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இங்கு கலந்து கொண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகள் திடீரென அரவையின் போது பழுதாகி விடுகிறது இதனால் கரும்பு அறுவடை செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது எனவே அரவை துவங்கியவுடன் ஆலை எந்த தங்கு தடையும் இன்றி இயங்கவேண்டும் எனதெரிவித்தனர்.

 

 

இதற்கு பதில் அளித்த ஆலை நிர்வாகிகள் 60 ஆண்டுகளுக்கு மேலாக பழைய உபகரணங்களை கொண்டு இந்த ஆலை இயங்கி வருகிறது எப்பொழுது எது பழுதடையும் என்பது தெரியாமல் பணியாற்றுவதாக தெரிவித்தனர்.முடிந்தவரை தங்களது முழு ஒத்துழைப்பையும் கொடுத்து இந்த ஆலை நிக்காமல் இயங்க உறுதுணையாக இருப்பதாக விவசாயிகளுக்கு உறுதி அளித்தனர்.

 

 

வருகின்ற 21 ம் தேதி நடப்பு ஆண்டிற்கான கரும்பு அரவை துவங்கும் என அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது மேலும்பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

CATEGORIES
TAGS