அளவிற்கு மீறி ஏரியில் மண் எடுப்பதால் குத்தகைக்கு மீன் பண்ணை எடுத்தவர் நஷ்டத்தில் மூழ்கும் அவல நிலை..
காட்பாடி அடுத்த தாதிரெட்டி பள்ளியில் அளவிற்கு மீறி ஏரியில் மண் எடுப்பதால் குத்தகைக்கு மீன் பண்ணை எடுத்தவர் நஷ்டத்தில் மூழ்கும் அவல நிலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மதிமண்டலம் தாதிரெட்டி பள்ளியில் உள்ள பெரிய ஏரியில் ஆந்திரா தமிழகத்தை இணைக்கும் சாலை அமைக்கும் பணிக்காக தாதிரெட்டி பள்ளியில் உள்ள ஏரியிலிருந்து மண் எடுக்க குஜராத்தை சேர்ந்த மான்டிகார்லோ என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்ததாரருக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் அந்த ஏரியில் அரசு நிர்ணயத்த ஒரு மீட்டர் அளவை விட ஐந்து மீட்டர் ஆறு மீட்டர் அளவிற்கு ஏரி மொரம்பு மண்ணை இரவும் பகலும் கடந்த நான்கு மாதமாக அள்ளி வருவதால் கிராமத்தை சுற்றியுள்ள மக்களின் நீர் ஆதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
மேலும் அதே ஏரியில் கார்த்தி என்பவர் மீன் பண்ணை வைக்க சுமார் ஜிஎஸ்டி உட்பட 4 லட்ச ரூபாய் செலவு செய்து மீன் குஞ்சுகளை ஏரியில் வளர்க்க குத்தகை எடுத்துள்ளார் இவர்கள் மண்ணெடுப்பதால் ஏரியில் உள்ள மீன்கள் அடிக்கடி செத்து மிதப்பதாகவும் மேலும் இவர்கள் எடுக்கும் பள்ளத்தில் மீன்கள் புதையுண்டு கிடப்பதாகவும் இதனால் தனக்கு 2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி கூறுகின்றார்.
அதுமட்டுமின்றி இந்த ஏரியின் வழியாக மின்சாரம் கம்பங்கள் செல்வதனால் மின்சார விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மேலும் ஏரியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை இவர்கள் வேரோடு சாய்த்துள்ளதாகவும் புலம்புகின்றனர்.
விவசாயி கார்த்திக் தங்களது மீன் வளர்ப்பு சங்கத்தில் மற்றும் பொதுப்பணி துறையின் கீழே இறங்கும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், பிடிஓ, கிராம பஞ்சாயத்து தலைவர், என பலரிடம் முறையிட்டும் இது குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லை எனவே உடனடியாக எனவே தனது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதாகும் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கார்த்தி உட்பட பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.