கவரிங் நகை கடைக்குள் புகுந்த கொள்ளையன்- 5 சவரன் தங்கை நகையும் சில வெள்ளி பொருட்களும் திருட்டு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் ரம்யா என்பவர் கவரிங் நகை கடை நடத்தி வருகிறார் இதனிடையே அதே கடையில் அடகு நகைகளும் வாங்கி வைத்து வருகிறார்.
இதனிடையே நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்றார் இன்று காலை கடை ஊழியர் கடை திறப்பதற்காக வந்த நிலையில் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் கடைக்குள் சென்று பார்த்த போது தங்க நகை என கருதி கவரிங் நகைகளை எடுத்துச் சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அடமானத்திற்காக வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகைகளும் சில வெள்ளிப் பொருட்களையும் கொள்ளையன் எடுத்துச் சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்தது மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர் மேலும் முழுமையான விசாரணைக்கு பின்பு திருட்டு போன பொருட்களின் மதிப்பு தெரிய வரும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர் நகைக்கடை என கருதி கவரின் நகைக்கடைக்குள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.