BREAKING NEWS

தேனி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா..! ஏலம் 2கோடியே 25லட்சம்.

தேனி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா..! ஏலம் 2கோடியே 25லட்சம்.

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு உணவு கூடங்கள் மற்றும் ராட்டினங்கள் அமைப்பதற்கான ஏலம் 2கோடியே 25லட்சத்திற்கு எடுக்கப்பட்டது.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது கௌமாரியம்மன் கோயில். இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சித்திரை திருவிழா வருகின்ற மே 9 முதல் 16ஆம் தேதி வரை 8நாட்கள் இரவு பகலாக நடைபெற உள்ளது. தென் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

இதையொட்டி அத்தியாவசிய தேவைகளான உணவுப் பொருட்கள் மற்றும் பொழுது போக்கு அம்சங்களுக்கான ராட்டினங்கள் அமைப்பதற்கான ஏலம் இன்று விடப்பட்டது.

வீரபாண்டியில் உள்ள இந்து அறநிலையத் துறை செயல் அலுவலர் அலுவலகத்தில் இணை ஆணையர் பாரதி தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 40க்கும் மேற்பட்ட ஏலதாரர்கள் பங்கேற்றனர். இதில் தேனியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ரூபாய் 1கோடியே 96லட்சத்திற்கு ராட்டினங்கள் அமைப்பதற்கான ஏல உரிமையை பெற்றார்.

அதே போல வயல்பட்டியை சேர்ந்த பிரபு என்பவர் ரூபாய் 25லட்சத்துக்கு உணவுக் கூடங்களும், 4லட்சத்திற்கு கண் மலர் அமைப்பதற்கான ஏல உரிமையை பெற்றார். இதில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஏலத்தில் முடி காணிக்கைக்கான ஏலம் ரூபாய் 9 லட்சத்து 51ஆயிரத்திற்கு விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வை முன்னிட்டு உணவு கூடங்கள் மற்றும் ராட்டினங்கள் அமைப்பதற்கான ஏலம் 2கோடியே 25லட்சத்திற்கு எடுக்கப்பட்டது.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது கௌமாரியம்மன் கோயில். இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சித்திரை திருவிழா வருகின்ற மே 9 முதல் 16ஆம் தேதி வரை 8நாட்கள் இரவு பகலாக நடைபெற உள்ளது. தென் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதையொட்டி அத்தியாவசிய தேவைகளான உணவுப் பொருட்கள் மற்றும் பொழுது போக்கு அம்சங்களுக்கான ராட்டினங்கள் அமைப்பதற்கான ஏலம் இன்று விடப்பட்டது.

CATEGORIES
TAGS