BREAKING NEWS

போலி ஆவணம் கொடுத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 17 லட்சம் தொழில் கடன் பெற்று மோசடி செய்த தம்பதியினர் கைது.

போலி ஆவணம் கொடுத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 17 லட்சம் தொழில் கடன் பெற்று மோசடி செய்த தம்பதியினர் கைது.

போலி ஆவணம் கொடுத்து 17 லட்சம் தொழில் கடன் பெற்று மோசடி; வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை.

வேலூர் மாவட்டம் காட்பாடி சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன் (51), பேபி (50) தம்பதியினர். ரவிச்சந்திரன் காய் டெக் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

 

 

இந்நிலையில் காட்பாடி வள்ளிமலை சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட (கனரா) வங்கியில் கடந்த 2015-ம் ஆண்டு தனது பெயரில் உள்ள சொத்து ஆவணத்தை கொடுத்து (சூரிட்டி) பிரிண்டிங் மிஷின் வாங்க ரவிச்சந்திரன் 10 லட்சமும், தொழில் மூலதன கடனாக பேபி 7 லட்சமும் என இருவரும் சேர்ந்து மொத்தம் 17 லட்சத்தை கடனாக பெற்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் கடனை செலுத்தாததால் இதுவரை வட்டியுடன் சேர்ந்து 37 லட்சம் நிலுவையில் இருந்துள்ளது.

 

 

இந்நிலையில் வங்கி நிர்வாகம் ரவிச்சந்திரனின் வீடுடன் கூடிய சொத்தை ஏலம் 19 லட்சத்துக்கு கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏலம் விட்ட போது, அதனை காதர் அலி எப்பவர் ஏலம் எடுத்துள்ளார். அதில் சொத்து ரவிச்சந்திரன் பெயரில் இல்லாமல் அவரது தாயார் பெயரில் இருப்பதும், பழைய ஆவணத்தை வைத்து முறைகேடாக வங்கி கடன் பெற்று ஏமாற்றியதும் தெரியவந்தது. இதனையடுத்து தனியார் (கனரா) வங்கி மண்டல மேலாளர் மாதவராவ் ரத்து என்பவர் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

 

 

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் வங்கி மோசடி செய்த ரவிச்சந்திரன், பேபி தம்பதியினரை இன்று கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் விசாரணைக்கு பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

CATEGORIES
TAGS