கோவில்பட்டி அருகே அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜூ திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு எட்டயபுரம் அதிமுக நகரக் கழக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்ட திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, பழம், பழரசம், வெள்ளரிக்காய், உள்ளிட்ட பொது மக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், கோவில்பட்டி நகர மன்ற உறுப்பினர் கவியரசன், அவைத்தலைவர் கணபதி, வார்டு. செயலாளர்கள் கருப்பசாமி, சீனா (எ) முத்துகிருஷ்ணன்,கார்ட்டன் பிரபு,சிவா (எ) சிவசங்கர பாண்டியன், கன்னியப்பன், மனோகரன், ரத்தினம்,செல்வி, சாந்தி, ஐஸ் முனியசாமி, மோகன், கார்த்தி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.