BREAKING NEWS

வேலூரில் உள்ள மலைப்பகுதிகளில் 1700 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.

வேலூரில் உள்ள மலைப்பகுதிகளில் 1700 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்,..

 

 

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் பேபி தலைமையிலான காவல் துறையினர் அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலைப்பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனையில் சாராயம் காய்ச்ச இருந்த இடங்கள் கண்டறிந்து 900 லிட்டர் கள்ள சாராய ஊரல் மற்றும் மூலப் பொருட்களை கண்டுபிடித்து அதிரடியாக அழித்தனர்.

 

 

இதேபோல் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் பேரணாம்பட்டு அடுத்த அரவாட்லா மலைபகுதியில் மேற்கொண்ட சோதனையில் 800 லிட்டர் கள்ள சாராய ஊரர்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்து அதனை அழித்தனர்.

 

 

வேலூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் கள்ளச்சாராய வேட்டை நடத்தி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் 1700 கள்ளச்சாராய ஊரல்கள் கண்டறிந்து அழித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS