அணைக்கட்டு பீச்சமந்தை மலைப்பகுயில் 1200 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்,
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் பேபி தலைமையிலான காவல் துறையினர் அணைக்கட்டு அடுத்த பீச்சமந்தை மலைப்பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனையில் சாராயம் காய்ச்ச இருந்த இடங்கள் கண்டறிந்து 1200 லிட்டர் கள்ள சாராய ஊரல் மற்றும் மூலப் பொருட்களை கண்டுபிடித்து அதிரடியாக அழித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் தொடர் கள்ளச்சாராய வேட்டை நடத்தி வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கள்ளச்சாராய ஊரல்களை கண்டறிந்து அதிரடியாக அழித்து வருவது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES வேலூர்
TAGS அணைக்கட்டுஅணைக்கட்டு பீச்சமந்தைஅல்லேரி மலைப்பகுதியில் கள்ளச்சாராயம்கள்ளச்சாராய உறல்கள்ளச்சாராய உறல் அழிப்புகள்ளச்சாராயம்குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பீச்சமந்தைமுக்கிய செய்திகள்வேலூர் மாவட்டம்