திண்டுக்கல்லில் ‘டிலைட் டு விஸ்டம்” அமைப்பின் சார்பில், மாணவ,மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கம்.

திண்டுக்கல்லில் “டிலைட் டூ விஸ்டம்” அமைப்பின் சார்பில் மாணவ மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கம் மேற்கு ரோட்டரி சங்க அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான சுயவிவரம் தயாரித்தல், வேலைவாய்ப்பு நேர்காணல்களை எதிர்கொள்ளும் முறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. வேலைவாய்ப்புக்கான நேர்காணலில் வெற்றி பெறக்கூடிய பல்வேறு வகையான திறன்களை வளர்த்துக் கொள்ளும் முறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
முன்னதாக, முகாம் அமைப்பாளர் வீரா வரவேற்புரை ஆற்றினார். தன்னார்வலர் சைனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் 50க்கும் மேற்பட்ட 9 கல்லூரிகளைச் சேர்ந்த பட்டதாரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக எலைட் குழுமத்தின் தலைவர் வினோத், பிபிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருத்திகா, அனுகிரக கல்லூரியின் சமூகவியல் துறை பேராசிரியை காயத்ரி ரஞ்சித் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
மேலும் ஆர்.ஆர்.ஜூவல்லர்ஸ் வினோத், சமூக செயற்பாட்டாளர் மகேஸ்வரி, மனித நேய மக்கள் அறக்கட்டளை நிறுவனர் செல்வம், கல்வி, வேலைவாய்ப்பு ஆலோசகர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவில் முத்து நன்றி கூறினார்.