BREAKING NEWS

வேலூரில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஆட்சியர் துவங்கி வைத்தார்.

வேலூரில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஆட்சியர் துவங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கையை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார். இதில் மாநகராட்சி மேயர் சுஜாதா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

பள்ளியில் மாணவர்கள் அதிக அளவு சேர வேண்டுமென பள்ளி பைகள் புத்தகங்கள் எழுதுகோல் போன்றவைகளும் வழங்கப்பட்டது இதில் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் அதிக அளவு பள்ளிகளில் சேர்கிறார்கள் தற்போது விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டம் 85 பள்ளிகளில் செயல்படுத்தப் படுகிறது.

பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக முதல்வரின் முயற்சியால் மாணவர்களை அதிகம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பள்ளிகளில் சேர்த்து வருகிறோம்.

 

காலை உணவு திட்டத்தால் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள் தற்போது இரண்டாம் கட்டமாக விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்குவோம் இடைநிற்றல் இதன் மூலம் குறைந்துள்ளது என்று கூறினார்.

Share this…

CATEGORIES
TAGS