காட்பாடி காந்தி நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட காந்திநகர் திடக்கழிவு மேலாண்மை அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார் இந்த பேரணியானது காந்திநகர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு காந்திநகர் கல்யாண மண்டபம் பேருந்து நிலையத்தில் நிறைவுற்றது.
இதனையடுத்து காந்திநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் பைகளை பயன்படுத்தக்கூடாது மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் முன்னதாக பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க கூடாது என்றும் மஞ்சள் பையை உபயோகிக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார், சுகாதார ஆய்வாளர்கள் தஞ்சை தமிழ் செல்வன், அன்புமணி சந்தோஷ், மேற்பார்வையாளர்கள் மோகன்ராஜ் ,முருகேசன், டேவிட் ,முருகானந்தம், ரூபஸ், மாநகராட்சி ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.