திருச்சி சஞ்சீவி நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது லாரி மோதி விபத்து.

திருச்சி சஞ்சீவி நகர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற தொழிலாளியின் பைக் மீது சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி மோதி விபத்து.
திருச்சி மாவட்டம் லால்குடி நன்னிமங்கலம் பகுதியை சேர்ந்த தொழிலாளி பிரேம்நாத் இவர் இன்று காலை திருச்சி அரியமங்கலத்தில் உள்ள வெல்டிங் பட்டறைக்கு வேலைக்கு செல்வதற்காக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அவர் சஞ்சீவி நகர் அருகே சாலையை கடக்க முயன்ற போது கொண்டையம்பேட்டையில் இருந்து சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக பிரேம்நாத் ஒட்டி வந்த பைக் மீது மோதியது இதில் பைக் அப்பளம் போல் நொறுங்கியது. பைக்கில் வந்த பிரேம்நாத் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் தொடர் விபத்துக்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, சர்க்கார்பாளையம் போன்ற பகுதிகளில் 500 மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
இங்கிருந்து நாள்தோறும் 3,000 த்திற்க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் சர்க்கார் பாளையம் வழியாக வந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்கின்றனர். இதனால் சஞ்சீவி நகர் பகுதியில் கடும் வாகன நெரிசலும், விபத்துகளும் நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் உடனடியாக அப்பகுதியில் சுரங்கப்பாதை (சப்-வே)அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.