சோளிங்கர் மின் கோட்டம் சார்பில் நடந்தது வருவாய் மேம்படுத்துல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மின் கோட்டம் சார்பில் வருவாய் மேம்படுத்துல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சோளிங்கர் செயற்பொறியாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் உமாசந்திரா (வெங்கடாபுரம்) முன்னிலை வகித்தார்.
உதவி செயற்பொறியாளர் சங்கர் (சோளிங்கர்) அனைவரையும் வரவேற்றார். இந்த கூட்டத்திற்கு வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அருணாச்சலம் கலந்து கொண்டு மின் பணியாளர்களின் பணி விதிமுறைகள் குறித்தும், அனைவரும் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி கவனக்குறைவில்லாமல் பாதுகாப்பான முறையில் பணிசெய்ய வேண்டும் எனவும் மேலும் மின் வருவாய் மேம்படுத்துல் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
இதில் உதவி மின் பொறியாளர்கள், மதிப்பீட்டு அலுவலர், உதவி கணக்கு அலுவலர், வருவாய் மேற்பார்வையாளர்கள், கணக்கீட்டு கண்காணிப்பாளர்கள் , கணக்கீட்டார்கள் மற்றும் கோட்ட கண்காணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.